For Daily Alerts
ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் 100 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 ஜெலட்டின் குச்சிகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸாருக்கு ஒரு தகவல் வந்தது. இதையடுத்து மணி என்பவரின் வீட்டை முற்றுகையிட்ட போலீஸார் அங்கு சோதனை நடத்தியபோது 100 ஜெலட்டின் குச்சிகள் சிக்கின. அவற்றை வைத்திருக்க உரிய உரிமம் ஏதும் இல்லை.
ஜெலட்டின் குச்சிகள் தவிர, மின்சார வயர்கள், எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களும் சிக்கின.
இதுதொடர்பாக மணியைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆனால், தனக்குப் பிடிக்காதவர்கள்தான் இவ்வாறு வெடிபொருட்களை தனது இருப்பிடத்தில் கொண்டு வந்து வைத்து விட்டதாக மணி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.