For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமர் இந்திராவைவிட 'பைலட் ராஜீவ்' அதிகம் சம்பாதித்தார்: சோனியா

By Chakra
Google Oneindia Tamil News

Rajiv Pilot
டெல்லி: எம்.பிக்கள் சம்பளத்தை உயர்த்தக் கோரி ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்பட பல்வேறு கட்சியினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால், இதற்கு இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சியினர் எதிர்ப்புத் தெரிவி்த்து வருகின்றனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமளியும் ஏற்பட்டது.

இதையடுத்து எம்பிக்கள் ஊதியத்தை உயர்த்துவது குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய சோனியா, என் கணவர் ராஜிவ் காந்த் விமான பைலட்டாக இருந்தபோது, அப்போது பிரதமராக இருந்த தனது தாயார் இந்திரா காந்தியை விட அதிகமாக சம்பாதித்தார் என்று கூறி எம்.பிக்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இதன்மூலம் எம்.பிக்கள் சம்பள உயர்வுக்கு சோனியா காந்தி முழு சம்மதம் தெரிவித்துவிட்டார்.

எனவே எம்.பிக்கள் ஊதிய உயர்வு மசோதா இந்த கூட்டத் தொடரிலேயே தாக்கலாகி சம்பளம் உயர்த்தப்படுவது உறுதியாகி விட்டது.

15வது நாடாளுமன்றம் அமைத்த நாளை முன் தேதியாக வைத்து சம்பளம் உயர்த்தப்பட உள்ளதாம்.

இந்திரா காந்தியின் மரணத்துக்கு முன் வரை இந்தியன் ஏர்லைன்சில் பைலட்டாக இருந்தார் ராஜிவ் என்பது குறிப்பிடத்தக்கது.

காமன்வெல்த் ஊழல்-சோனியா உறுதி:

காமன்வெல்த் போட்டி முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சோனியா காந்தி கூறியுள்ளார்.

காமன்வெல்த் போட்டிகள் முடிந்த பிறகு ஊழலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய சோனியா, டெல்லியில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கோ, தனி நபருக்கோ சொந்தமானதல்ல. இந்தப் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்படுவது நமது கடமை.

காமன்வெல்த் ஏற்பாடு முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இதில் தொடர்புடைவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். போட்டி முடிந்த பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய பிரதமர் அமைச்சரவை குழுவை நியமித்துள்ளார் என்றார்.

ராகுல் தொகுதி அமேதி பெயரை மாற்ற தடை:

இதற்கிடையே அமேதி தொகுதியின் பெயரை சாகுஜி மக்ராஜ் நகர் என்று மாற்ற உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி உத்தரவிட்டதற்கு லக்னெள உயர் நீதிமன்றம் தடை விதித்தள்ளது.

இப்போது ராகுல் காந்தி இந்தத் தொகுதி எம்.பியாக இருக்கிறார். முன்பு இங்கு சஞ்சய் காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோர் போட்டியிட்டு வென்றுள்ளனர்.

தொடர்ந்து நேரு குடும்பத்தினரே வென்று வரும் இந்தத் தொகுதியில் பெயரை மாற்ற மாயாவதி முடிவு செய்தார். சாகுஜி மக்ராஜ் நகர் மாவட்டம் என்று அமேதி தொகுதியின் பெயர் மாற்றப்படும் என்று கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதை எதிர்த்து பொது நல வழக்குகள் தாக்கலாயின. இதை விசாரித்த நீதிபதிகள் அமேதி பெயர் மாற்றத்துக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு வழக்கை அக்டோபர் மாதம் முதல் வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X