For Daily Alerts
Just In
நேபாளத்தில் சிறிய ரக விமானம் விழுந்து 14 பேர் பலி
காத்மாண்டு: நேபாளத்தில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் அதில் இருந்த 14 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பலரும் வெளிநாட்டினர் ஆவர்.
காத்மாண்டு அருகே மலைப் பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது கன மழை பெய்து வந்ததால் விமானம் தடுமாறி மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
ஷிகார்பூர் கிராமத்தில் விமான் விழுந்து விபத்துக்குள்ளானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட டொர்னியர் விமானமாகும். அதில் 11 பயணிகளும், 3 ஊழியர்களும் இருந்தனர். இமயமலைப் பகுதியை சுற்றிப் பார்க்க அந்த விமானத்தில் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். ஆனால் வானிலை மோசமாக இருந்தாதல் காத்மாண்டு திரும்பியபோதுதான் விபத்து நடந்தது.
விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்ள் வெளிநாட்டினர்.