For Daily Alerts
Just In
இந்தியாவில் 3 மாதங்களில் ஆளெடுப்பு வேகம் பிடிக்கும்-சர்வே
டெல்லி: இந்தியாவில் இன்னும் 3 மாதங்களில் ஆளெடுப்புப் பணிகள் வேகம் பிடிக்கும் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
பொது நிர்வாகப் பணிகள், கல்வி, சேவைத்துறைகளில் அடுத்த 3 மாதங்களில் பெருமளவில் ஆளெடுப்புப் பணிகள் நடைபெறும் எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.
உலக அளவில் இந்தியாவில்தான் வேலைக்கான ஆளெடுப்பு வேகமாக இருக்கும் எனவும் அது தெரிவித்துள்ளது. அதேபோல சீனா,தைவானிலும் ஆளெடுப்புப் பணிகள் வேகமாக இருக்கும் எனவும் அது தெரிவித்துள்ளது.
மேன்பவர் எம்ப்ளாய்மென்ட் அவுட்லுக் நடத்திய சர்வேயில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ளூர்ச் சந்தை தொடர்ந்து சிறப்பாக உள்ளதாகவும், பொருளாதார சீர்குலைவு இந்தியாவை பெரிய அளவில் பாதிக்காமல் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருப்பதாலும் இங்கு வேலைக்கான வாய்ப்புகள் தொடர்ந்து சிறப்பாக இருக்கும் எனவும் அது கூறுகிறது.