For Daily Alerts
திமுக எம்.எல்.ஏவின் தங்கை மகள் கடத்தப்பட்டார்-தீவிர தேடுதல் வேட்டை
உளுந்தூர்ப்பேட்டை: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ. திருநாவுக்கரசுவின் தங்கை வள்ளி மகள் அனுசுயாவை யாரோ சிலர் கடத்திச் சென்றுள்ளனர். அவரைக் கண்டுபிடிக்க தீவிர தேடுதல் முடுக்கி விடப்பட்டுள்ளது.
வள்ளியின் மகள் அனுசுயா. அவருக்கு வயது 16. உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏ.குரும்பூர் மகளிர் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இவர் பள்ளி விட்டு வெளியே வந்தபோது நடுத்தர வயதுடைய ஆண் ஒருவர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அம்மா அழைத்து வரச் சொன்னதாக கூறி அனுசுயாவை அவர் அழைத்துச் சென்றுள்ளாராம்.
இதுகுறித்து வள்ளி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அனுசுயாவை ஆந்திராவுக்கு கடத்திச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இதையடுத்து அவரைக் கண்டுபிடிக்க போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.