For Daily Alerts
முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் அண்ணி மரணம்
சென்னை: முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் அண்ணன் மனைவி தனம்மாள் தனது 80வது வயதில் நன்னிலத்தில் மரணமடைந்தார்.
தயாளு அம்மாளின் அண்ணன் கோ.தட்சிணாமூர்த்தி. இவர் திருவாரூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு தலைவராக உள்ளார். அவரது மனைவி தனம்மாள். இவர்கள் நன்னிலத்தை அடுத்த கோவில்திருமாளம் கிராமத்தில் வசித்து வந்தனர்.
தனம்மாளுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். தகவல் அறிந்ததும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, உள்ளிட்டோர் விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினர்.
முதல்வரின் மகள்கள் செல்வி, கனிமொழி, அமைச்சர்கள், திமுக பிரமுகர்கள், உள்ளிட்டோரும் சென்று அஞ்சலி செலுத்தினர்.