தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற 4 பேர் கைது
ஈரோடு: பெருந்துறை அருகே உள்ள புங்கம்பாடியில் ரயில் தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள புங்கம்பாடி ரயில் தண்டவாளத்தில் மர்ம நபர்கள் சிலர் கல் வைத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரயில் என்ஜின் ஓட்டுநர் பார்த்து விட்டதால் அந்த ரயில் மிகப் பெரிய விபத்தில் இருந்து தப்பியது.
தண்டவாளத்தில் கல் வைத்தவர்கள் பற்றி ரயில்வே என்ஜின் டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்கேஸ் (22), மனோஜ் யாதவ் (25), பிஜேஷ் யாதவ் (22), ருத்தன் யாதவ் (42) ஆகிய 4 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 4 பேரும் புங்கம்பாடியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வேலைபார்த்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட இந்த 4 பேரை போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர்டுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் எதற்காக இந்த சதிச் செயலில் ஈடுபட்டனர் என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை.