டாக்டர்கள் கவனக்குறைவால் இறந்த கர்ப்பிணி குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி
புளியங்குடி: புளியங்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் கவனக்குறைவால் இறந்த கர்ப்பிணி பெண் ஜமீலா பீவி குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவியை கலெக்டர் ஜெயராமன் வழங்கினார்.
புளியங்குடியில் நகர்புற ஏழைகளுக்கு வட்டி மான்யத்துடன் வீட்டு கடன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறும் நிகழ்ச்சி சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு வாசுதேவநல்லூர் தொகுதி எம்எல்ஏ டாக்டர் சதன்திருமலைக்குமார் தலைமை வகித்தார். நகராட்சிகளின் மண்டல இயக்குனர் மோகன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயராமன் பேசுகையில்,
ஜூன் 23ம் தேதி புளியங்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் கவனக்குறைவால் இறந்த ஜமீலாபீவியின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கிட முதல்வருக்கு அறிக்கை அனுப்பி வைத்தேன்.
இதையடுத்து முதல்வர் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டதை அடுத்து இன்று அவரது குடும்பத்திற்கு ரூ.2 லட்சத்திற்கான நிவாரண நிதி இந்திரா விகாஸ் பத்திரமாக வழங்கப்பட்டது என்றார்.