சினிமாவில் நடிக்கிறார் கர்நாடக முதல்வர் எதியூரப்பா

சபரிமலை ஐயப்பனை மையமாக வைத்து உருவாகும் பக்திபடத்தில் குருசாமி வேடத்தில் நடிக்க உள்ளார் எதியூரப்பா.
தனக்கு அரசியல் நெருக்கடி நேரும் போதேல்லாம் கேரள மாநிலம் கண்ணுர் தளிபுரத்தில் உள்ள ஸ்ரீராஜராஜேஸ்வரர் கோவில் உள்பட சில கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். கண்ணூர் வரும்போது அங்கு உள்ள ரமேஷன் என்ற தனது ஆஸ்தான ஜோதிடரையும் எடியூரப்பா சந்தித்து ஆலோசனை கேட்பார்.
தற்போது கர்நாடக பாஜகவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் கடந்த 8ம் தேதி கண்ணூர் வந்தார் எதியூரப்பா. அப்போது ஜோதிடரை சந்தித்து விட்டு தளிபரம்பு கோவிலுக்கு சென்றார்.
அங்கு அவரை சந்தித்து திரைப்பட இயக்குனர் பிஜேஷ் மணி என்பவர் ஐயப்பனின் வரலாற்று பற்றி சொல்லும் சினிமா எடுக்க இருப்பதாகவும், இதில் குருசாமி வேடத்தில் எதியூரப்பா நடிக்க வேண்டும் என்றும் கோரி்க்கை விடுத்தார்.
தீவிர ஐயப்ப பக்தரான எதியூரப்பா அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். பூலோக ரட்சகன் என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் எதியூரப்பா நடிக்க உள்ளார். இந்த படம் 18 இந்திய மொழிகளிலும், 17 வெளிநாட்டு மொழிகளிலும் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.