For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடைப்பந்தாட்ட வீரரை மணக்கிறார் மரியா ஷரபோவா

Google Oneindia Tamil News

Maria Sharapova
லாஸ் ஏஞ்சலெஸ்: லேக்கர் கூடைப்பந்தாட்ட அணியின் வீரரான சாஷா வுஜாசிக்குடன், டென்னிஸ் இளம் புயல் மரியா ஷரபோவாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. விரைவில் இருவரும் மணம் புரியவுள்ளனர்.

சாஷா, ஸ்லோவேனியாவைச் சேர்ந்தவர். மரியா, ரஷ்யாவைச் சேர்ந்தவர். இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வருகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று கலிபோர்னியாவின் மன்ஹாட்டன் பீச்சில் உள்ள சாஷாவின் வீட்டில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மரியாவுக்கு சாஷா நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவித்தார்.

திருமணம் எப்போது என்பது குறித்து இருதரப்பும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் விரைவிலேயே இருக்கலாம் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X