எங்களுக்கு தலைமை காங். அல்ல, திமுகதான்-கார்த்திக்கு வி.சிறுத்தைகள் பதிலடி
சிதம்பரம்: நாங்கள் இடம் பெற்றிருப்பது திமுக தலைமையிலான கூட்டணியில்தான். மாறாக கார்த்தி சிதம்பரம் கூறுவது போல காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அல்ல என்று கூறியுள்ளது விடுதலைச் சிறுத்தைகள்.
திருமாவளவன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய க் கோரிக்கை விடுத்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பதிலடி தந்துள்ளது.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில இணை செயலாளர் காவியச்செல்வன் வெளியிட்டுள்ள அறிகை...
தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க. தலைமையுடன் கூட்டணி வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இல்லை. இதை புரிந்து கொள்ளாமல் கார்த்தி சிதம்பரம் பேசியுள்ளார். இந்த செயல் சிறு பிள்ளைத்தனமானது.
தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரும்பாலான வாக்குகளைப் பெற்றுத்தான் காங்கிரஸ் கட்சியினர் எம்.பி.க்காளக உள்ளனர்.
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் தி.மு.க. , விடுதலை சிறுத்தைகள் செல்வாக்கினாலும் வெற்றி பெற்றார்.
திருமாவளவன் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் கடந்த 2004 - ம் ஆண்டு நடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு 2,55,773 வாக்குகள் பெற்று 2 - ம் இடத்தை பெற்றார்.
ஆனால் கடந்த 1998 ம் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சிதம்பரம் தொகுதியில் தனித்து போட்டியிட்டு வெறும் 43,214 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தது . இதை கார்த்திக் சிதம்பரம் உணர்ந்து பொறுப்போடு பேசவேண்டும் என்று கூறியுள்ளார் காவியச் செல்வன்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications