For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாஜி எம்எல்ஏ ரவிசங்கருக்கு மேலும் ஒரு ஆண்டு சிறை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு

Google Oneindia Tamil News

நெல்லை: விளாத்திகுளம் கூட்டுறவு சங்க மோசடி வழக்கில் முன்னாள் எம்எல்ஏ ரவிசங்கருக்கு மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை எம்எல்ஏவாக இருந்தவர் ரவிசங்கர். இவர் எம்எல்ஏவாக இருந்தபோது விளாத்திகுளம் கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்தார். அப்போது ரூ.18 லட்சம் பணம் கையாடல் செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது.

இது தொடர்பாக தூத்துக்குடி வணிக குற்றவியல் பிரிவு போலீசில் கூட்டுறவு சங்க அதிகாரிகள் புகார் செய்தனர். ரவி சங்கர் மீது 29-1-2000 அன்று ரூ.8 லட்சம் மோசடி செய்ததாகவும், 7-2-2000 அன்று ரூ.2 லட்சம் மோசடி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த பணமோசடிகளை ஒரு வழக்காகவும், 31-5-2000 அன்று வங்கி பணம் ரூ.5 லட்சத்தை தனது பெயருக்கு காசோலையாக மாற்றியது தொடர்பாக இன்னொரு வழக்கு என்று 3 வழக்குகள் போலீசார் பதிவு செய்தனர்.

இந்நிலையில் 3வது வழக்கான 1998-ம் ஆண்டு ரூ.3 லட்சம் மோசடி செய்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக ரவிசங்கரை போலீசார பலத்த பாதுகாப்புடன் நெல்லை 2வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது ரவிசங்கருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீப்பளித்தார்.

English summary
Former MLA Ravishankar is in prison in cheating case. Police had filed 3 cases against him. Third case judgement came, in which he got another 1 year imprisonment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X