இன்று வெள்ளை மாளிகையில் ஒபாமாவை சந்திக்கும் சர்தாரி
வாஷிங்டன்: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அமெரிக்க அதிபர் ஒபாமாவை இன்று வெள்ளை மாளிகையில் சந்திக்கிறார். அப்போது தீவிரவாதத்தை ஒழிக்க கூட்டு முயற்சி உள்ளிட்ட பல விவகாரங்கள் பற்றி பேசுகின்றனர்.
இது குறித்து வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் ராபர்ட் கிப்ஸ் கூறியதாவது,
இன்று அதிபர் ஒபாமா பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசுகிறார். அவர்கள் பொருளாதார சீரமைப்பு, தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து பேசவிருக்கிறார்கள்.
சர்தாரி கடந்த மாதம் இறந்த ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான சிறப்பு தூதர் ரிச்சர்டு ஹால்புரூக்கின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக வாஷிங்டன் வந்துள்ளார். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி அவரை ஒபாமாவை சந்திக்க வைக்க முடிவு செய்தோம். இந்த சந்திப்பின்போது செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார்.
சந்திப்பின்போது ஹில்லரி கிளின்டனும் உடன் இருப்பார் என்று செய்தித் தொடர்பாளர் கிரௌலி தெவித்தார்.
இது குறித்து கிரௌலி கூறியதாவது,
முன்னதாக துணை அதிபர் ஜோ பிடென் பாகிஸ்தான் சென்று அந்நாட்டு அதிபர் சர்தாரி மற்றும் பிரதமர் ஜிலானியை சந்தித்துப் பேசினார். இதனால் இன்று நடக்கும் சந்திப்பை அமெரிக்கா மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது என்றார்.
சர்தாரி கடந்த ஆண்டு இறுதியில் வாஷிங்டனுக்கு அரசு முறைப் பயணம் செய்வதாக இருந்தது. அதையடு்தது ஒபாமா பாகிஸ்தான் செல்வதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications