பெனாசிர் கொலை வழக்கில் முஷாரப்புக்கு பிடிவாரண்ட்!

Subscribe to Oneindia Tamil

Musharraf
ராவல்பிண்டி: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை வழக்கில், அப்போதைய அதிபர் முஷாரப்புக்கு ராவல்பிண்டி பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி ராவல்பிண்டியில் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த வாரம் இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் அப்போதைய அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு, பெனாசிர் கொலையில் தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் ராவல்பிண்டி பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், முஷாரபுக்கு பிடிரண்ட் பிறப்பித்துள்ளது. பிப்ரவரி 19ம் தேதியன்று அவர் கோர்ட்டில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்போது முஷாரப் லண்டனில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+