விக்கிலீக் அதிபர் அசான்ஜுக்கு முறைகேடான உறவுகள் மூலம் 4 குழந்தைகள்!

உலக நாடுகள் விஷயங்களில் அமெரிக்க வெளியுறவுத்துறையின் சுமார் 1 லட்சம் கேபிள் தகவல்களை வெளியிட்டும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் மற்றும் ஜெர்மன் வங்கிகளில் முடக்கி வைத்து கள்ளப் பணம் தொடர்பாகவும் விவரங்களையும் வெளியிட்டும் வருபவர் விக்கிலீக் இணைய தளத்தின் நிறுவனர் அதிபர் ஜுலியன் அசான்ஜ் (39).
அமெரிக்க ராணுவ, வெளியுறவு ரகசியங்கள், இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களின் ரகசிய ஆவணங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இதையடுத்து இவர் மீது கற்பழிப்பு வழக்குகளைப் போட்டு முடக்க சில நாடுகள் முயன்றன. இதற்கு அமெரிக்காவும் உதவியது.
சமீபத்தில் சூடானில் 2 பெண்களை இவர் கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.
இந் நிலையில் ஜுலியன் குறித்து அவரது இணையத் தளத்தில் பணிபுரிந்த முன்னாள் செய்தி தொடர்பாளர் டேனியல் டொம்ஸ்சிட் பெர்க் 'Inside WikiLeaks: My Time with Julian Assange at the World's Most Dangerous Website' என்ற புத்தகம் எழுதியுள்ளார். அதில், அசாங்கேவுக்கு உலகம் முழுவதும் பல காதலிகள் உள்ளனர். அவர்கள் மூலம் அவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
எங்களுடன் அமர்ந்து பேசுகையில், நான் உலகின் பல நாடுகளிலும் பல குழந்தைகளுக்கு தகப்பன். இதுவரை 4 கண்டங்களில் 4 குழந்தைகளுக்கு தகப்பனாகிவிட்டேன். இன்னும் பல நாடுகளிலும் குழந்தைகளுக்கு நான் தகப்பன் ஆக வேண்டு்ம் என்பது என்று ஜூலியன் கூறுவார்.
தனக்கு 22 வயதுக்குள்ளான இளம் பெண்களே பிடிக்கும். அதிலும் புத்திசாலியான, அதே நேரத்தில் அதிகம் கேள்வி கேட்காத பெண்களையே பிடிக்கும் என்பார் ஜூலியன் என்று தனது புத்தகத்தில் கூறியுள்ளார் டேனியல்.
விரைவில் வெளியாகவுள்ள இந்தப் புத்தகத்தில் ஜூலியன் குறித்து மேலும் ஏராளமான தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications