For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2016 வரை தேர்தலில் போட்டியில்லை! - சீமான்

By Chakra
Google Oneindia Tamil News

கரூர்: வரும் 2016 வரை நாம் தமிழர் இயக்கமோ, தாமோ தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறினார் இயக்குநரும் நாம் தமிழர் கட்சித் தலைவருமான சீமான்.

விலைவாசி உயர்வை கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் கரூர் மாவட்டம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் 80 அடி ரோட்டில் நடைபெற்ற இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் இயக்குனர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், "விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்த கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. மனித உடலுக்கு தோள் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு ஆறுகளில் மணல் முக்கியம் ஆகும்.

ஆனால் தற்போது ஆறுகளில் மணல் கொள்ளை அடிக்கப்படுகிறது. இந்த மண்ணிற்காக எத்தனையோ பேர் உயிர் இழந்து உள்ளார்கள். ஆறுகளில் 1/2 அங்குல மணல் உற்பத்தி ஆவதற்கு 100 ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.

தற்போது அடிக்கணக்கில் மணல் அள்ளப்படுகிறது. மணல் குவாரிகளில் 2 பொக்லைன் எந்திரம் மூலம் தான் மணல் அள்ள வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதனால் தற்போது மணல் அள்ளும் குவாரிகளின் எண்ணிக்கையை உயர்த்தி விட்டார்கள்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பிரச்சினையில் ராஜா மீது விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் காமன்வெல்த் போட்டியில் ஊழல் செய்தவர்களை ஏன் கைது செய்யவில்லை?

ஒரு ரூபாய் என்றாலும், ஒரு கோடி என்றாலும் திருட்டு, திருட்டு தான். போரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வீடு கட்டுவதில் ஊழல் செய்தவர்களை ஏன் கைது செய்யவில்லை. எத்தனை கொள்ளையில் ஈடுபட்டாலும்,
பதவி விலகினால் போதுமா?

இலங்கை தமிழர்கள் இன்னமும் அதே சிறை, அதே உடை, உணவு ஆகியவற்றில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதைப்பற்றி பேசினால், இலங்கை தமிழர் பிரச்சனை பற்றித்தான் பேசுகிறார்கள் என்று கூறுகிறார்கள். வேறு எதை பற்றி பேசுவது என்று புரியவில்லை.

தமிழக தூதரகம் என்ன செய்து கொண்டு இருக்கிறது. இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையில் உள்ள சீனர்கள் தான் சுட்டுக் கொல்கிறார்கள். மக்கள் ஒரு துளி நேர்மையை தான் எதிர்பார்க்கிறார்கள்.

இலவசம் இல்லாமல் நிதீஷ்குமார் ஆட்சி செய்கிறார். தமிழ்நாட்டில் எந்த ஒரு பிரச்சனைக்கும் போராட வேண்டிய நிலை உள்ளது. எதையும் உற்பத்தி செய்ய முடியவில்லை.

வெளி நாட்டில் உள்ள கறுப்பு பணத்தை கொண்டு வர முடியாது என்று கூறுகிறார்கள். மற்ற நாடுகளை விட இந்திய நாட்டின் கறுப்பு பணம் தான் அதிக அளவு உள்ளதாக கூறுகிறார்கள். அந்த பணத்தின் வட்டியை வைத்தே 100 ஆண்டுக்கு

2016-ம் ஆண்டு வரை தேர்தலை சந்திக்கும் எண்ணம் இல்லை. மேலும் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பது தான் எங்கள் குறிக்கோள்...", என்றார்.

கரூரில் பிரபாகரன் டிஜிட்டல் பேனர் வைத்ததற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளார்களே?, என நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு, "அவர்களுக்கு வேறு வேலை இல்லை...வேவலையில்லாதவர்கள் இப்படித்தான் கிறுக்குத்தனம் பண்ணுவார்கள்," என்றார்.

English summary
Film director turned politician Seeman declared that his party wouldn't contest in elections till 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X