For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக கூட்டணியில் கொமுக..செங்கோட்டையனை வென்ற முத்துசாமி

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் முத்துசாமியின் கடும் முயற்சிகள் காரணமாகவே கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அந்தக் கட்சியை அதிமுக கூட்டணிக்குக் கொண்டு வர முயன்ற இன்னொரு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தோல்வி அடைந்துள்ளார்.

கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தினர் திமுக, அதிமுக என இரு தரப்பிலும் பேச்சு நடத்தி வந்தனர். அதிமுக கூட்டணியில் 5 சீட்கள் தருவதாக பேச்சு நடந்து கொண்டிருந்தது. திமுக தரப்பில் முத்துசாமி களமிறங்கிப் பேச்சு நடத்தினார். இந்தக் கட்சியின் தலைவரான பெஸ்ட் ராமசாமி திமுக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்ட, பொதுச் செயலாளரான ஈஸ்வரன் அதிமுக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டினார்.

எந்தக் கட்சி அதிக இடங்கள் தருகிறதோ அவர்களுடன் கூட்டணி அமைப்பது என்ற முடிவில் ராமசாமியும் ஈஸ்வரனும் இருந்தனர். இதில் ஈஸ்வரனுடன் செங்கோட்டையன் 15 முறை பேச்சு நடத்தினார். பேச்சுவார்த்தைகள் இழுத்துக் கொண்டே போனதால் கடு்ப்பான ஈஸ்வரன், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார். இதையடுத்து செங்கோட்டையன்.. இதோ அம்மா கூப்பிடுவார் அதோ அம்மா கூப்பிடுவார் என்று காலத்தைக் கடத்தியிரிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவை சந்திக்கும்போது எப்படி மரியாதையாக நிற்க வேண்டும், உட்கார வேண்டும், நடக்க வேண்டும் என்று கிளாஸ் எல்லாம் எடுத்துள்ளனர். இதையெல்லாம் தாங்கிக் கொண்டு காத்திருந்த ஈஸ்வரனுக்கு பல வாரம் டைம் தான் வேஸ்ட் ஆகியுள்ளது.

இந் நிலையில் முத்துசாமி வேகமாக பேச்சு நடத்தி பெஸ்ட் ராமசாமியை அறிவாலயத்துக்குக் கூட்டி வந்து முதல்வர் கருணாநிதியை சந்தி்க்க வைத்துவிட்டார். கொங்கு நாடு கட்சிக்கு 6 இடம் தருவதாகச் சொல்லி பின்னர் அதை 7 ஆக உயர்த்தி ஒப்பந்தமும் போட்டு அனுப்பிவிட்டார்.

இதையறிந்த அதிமுக வட்டாரம் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. செங்கோட்டையனுக்கு செம டோஸ் விழுந்ததாகவும் சொல்கிறார்கள்.

English summary
DMK has now roped in the fledgling Kongunadu Munnetra Kazhagam (KNMK), to take on its main rival AIADMK in Kongu region. It was former ADMK minster Muthusamy who brought this party into DMK alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X