ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோதே திமுக விலகியிருக்க வேண்டும்-சீமான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆலங்குடி: ஈழத்தில் தமிழர்கள் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டபோதே, காங்கிரஸிடமிருந்து திமுக விலகியிருக்க வேண்டும். இப்போது அக்கட்சி எடுத்திருப்பது தாமதமான முடிவாகும் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு திலீபன் திடலில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், கொலையாளிகளைக் கண்டுபிடிக்க வலியுறுத்தியும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு சீமான் பேசுகையில்,

இலங்கையில் நடந்த உச்சக்கட்ட போரில் மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கடந்த ஆண்டே வலியுறுத்தினோம். அப்போதே, இதை திமுக செய்திருந்தால் இலங்கையில் ஒட்டுமொத்த தமிழ் இனமும் அழியாமல் இருந்திருக்கும்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முத்துக்குமார் கொலையைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெறும் என்றார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK's decision is too late, said Naam Tamilar party president Seeman. He also said that, We urged DMK to withdraw its support to the Congress led UPA govt, while the war was raged in Eelam. But DMK did not heed our demand. Now they have a taken the decision, but it is late, he added.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற