For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் 5 தொகுதிகள் கேட்கும் பாமக!

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் மட்டும் தங்களுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கித் தர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

திமுக கூட்டணியில் 31 சீட்களைப் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, தங்களுக்குத் தேவையான தொகுதிகள் எவை என்பதை குறிப்பிட்டு திமுகவிடம் ஒரு பட்டியல் கொடுத்துள்ளது.

அதில் சென்னையில் மட்டும், வேளச்சேரி, அண்ணாநகர், விருகம்பாக்கம், திரு.வி.க.நகர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளைக் கேட்டுள்ளது.

இதுதவிர, சேலம் மேற்கு, மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, நெய்வேலி, திருப்போரூர், செங்கல்பட்டு, கும்மிடிபூண்டி, சிதம்பரம், வந்தவாசி, செஞ்சி, சோளிங்கர், அணைக்கட்டு, ஆற்காடு, பெண்ணாகரம், தர்மபுரி, பாலகோடு, கபிலர்மலை, மயிலாடுதுறை, புவனகிரி, திருப்பத்தூர், மயிலம், அரக்கோணம், விக்கிரவாண்டி, மதுர வாயல், அம்பத்தூர் ஆகிய தொகுதிகளை குறிப்பிட்டுக் கொடுத்துள்ளனர்.

கடந்த தேர்தலில் இதே திமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, செங்கல்பட்டு, ஆற்காடு, பெரணமல்லூர், தாரமங்கலம், காஞ்சீபுரம், முகையூர், எடப்பாடி, மேல்மலையனூர், ஓமலூர், கபிலர்மலை, பூம்புகார், மேட்டூர், திருப்போரூர், காவேரிப்பட்டிணம், பவானி, திருப்பத்தூர், தருமபுரி, பண்ருட்டி ஆகிய 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்தத் தொகுதிகளில் பலவற்றின் பெயர் தொகுதி சீரமைப்பின்போது மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Pattali Makkal Katchi has give a list of 31 constituencies which they required to contest in the coming elections. But the DMK has yet to be finalised PMKs list and the status will be revealed in a couple of days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X