For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொகுதிக்கு 5 பேர் பட்டியலுடன் அதிமுக வேட்பாளர் தேர்வு

Google Oneindia Tamil News

நெல்லை: தொகுதிக்கு 5 பேரைக் கொண்ட பட்டியலுடன் கொண்ட வேட்பாளர் பட்டியலுடன் அதிமுக வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 13ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக, காங், பாமக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து மனுக்களை பெற்று வருகின்றனர்.

அதிமுகவை பொறுத்தவரை அந்த கட்சியிலிருந்து அதிகம் போட்டியிட கடையநல்லூர் தொகுதியில் நூற்றக்கணக்கானோர் மனுக்கள் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையில் கூட்டணி கட்சிகள் தொகுதி ஓதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு பணிகளி்ல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுகவை பொறுத்த வரை நெல்லை மாவட்டத்தில் உள்ள புறநகர், மாநகர் தொகுதிகளில் கட்சியின் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு செய்தவர்கள் பட்டியல் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இந்த பட்டியலில் இருந்து தொகுதிக்கு 5 பேர் கொண்ட பட்டியலை கட்சியின் தலைமை தேர்வு செய்து இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இதனிடையே திமுக, காங் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அதிமுக தேர்தல் களம் மேலும் சுறுசுறுப்பு அடைந்துள்ளது. தொகுதிகளில் போட்டியிட சென்னைக்கு படையெடுக்கும் அதி்முகவினரின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்துள்ளது.

சிபாரிசுகளின் அடிப்படையில் சீட்டினை பெறுவதற்கு அதிமுகவினரின் சென்னை பயணம் கடந்த இரண்டு நாட்களாக அதிகமாக காணப்பட்டு வருவதால் நெல்லை மாவட்டத்தில் அதிமுகவுக்கு கூடுதலான அளவில் தொகுதி ஓதுக்கிடு செய்யப்படுமென அதிமுக தரப்பில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

English summary
ADMK has selected 5 persons from each constituency for candidate selection. The rift in DMK and Congress has created joy among the ADMK cadres. They are keen to get a seat in polls. Nellai cadres are expected to get more seats for the partymen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X