For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டக் கல்லூரி பேராசிரியையின் கீழ்த்தர நடவடிக்கை-துரைமுருகனுக்கு சீமான் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: கோவை சட்டக் கல்லூரி பேராசிரியை தாமரைச்செல்வி என்பவர் மாணவிகளை கீழ்த்தரமாக நடத்துவதற்குப் பொறுப்பேற்று சட்ட அமைச்சர் துரைமுருகன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

கோவை சட்டக் கல்லூரி பேராசிரியை தாமரைச் செல்வி என்பவர் கல்லூரி விடுதி மாணவிகளை மிகுந்த கீழ்த்தரமாக நடத்துவதோடு இந்துத்துவா உணர்வையும்அப்பட்டமாக வெளிப்படுத்தி வருகிறார். மேலும் விடுதி மாணவிகளுக்கு அரசு அளிக்கும் பணத்தினை கையாடல் செய்து அவர்களுக்கான எந்த அடிப்படை வசதியுயையும் செய்து தர மறுக்கிறார்.

இவர் மீது நடவடிக்கை எடுக்க பல முறை கல்லூரி நிர்வாகத்திடமும்,கல்லூரி இயக்குனரகத்திடம் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் பேராசிரியை தாமரைச் செல்வி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் நூற்றுக் கணக்கானோர் கடந்த 13 நாட்களாக கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இத்தனை நாள் கழித்தும் கல்லூரி நிர்வாகமும்,இயக்குனரகமும் அவர்களின் குரலுக்குத் துளியும் செவி சாய்க்கவில்லை. அதேநேரம் கல்லூரிக்குள் இருந்து போராடிவரும் மாணவர்களுக்கு உணவும், நீரும் அனுப்புவதை போலீஸ் மூலம் தடுத்து மாணவர்களைப் பட்டினி போட்டு வழிக்கு கொண்டுவர முயல்கிறது.

அரசின் மாணவர் விரோதப்போக்கை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் க்ண்டிக்கிறது. நாட்டை வருங்காலத்தில் வழி நடத்தும் சட்டக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் குறித்து துளியும் கவலை கொள்ளாமல் அமைச்சர் துரைமுருகன் காங்கிரஸ்காரர்களுடன் லாவணி பாடிக் கொண்டிருக்கிறார். அவர் மாணவர் பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும். அல்லது தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கட்சி வேலையைப் பார்க்கச் செல்ல வேண்டும்.

ஆகவே சட்டக் கல்லூரி இயக்குனரகம் உடனடியாக பேராசிரியை தாமரைச் செல்வியை பணி நீக்கம் செய்வதோடு மாணவ மாணவிகளுக்கு அடிப்படை வசதியுயையும் செய்து தர வேண்டும் என நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

English summary
Naam Tamilar party president Seeman has urged Law Minister Duraimurugan to resign immediately in Coimbatore Law college issue. He slammed Duraimurugan for not taking any action against Law college Prof Thamariselvi for her alleged harassment towards girl students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X