For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹோண்டா வசமிருந்த பங்குகளை பாதி விலைக்கு வாங்கிய ஹீரோ குழுமம்!

By Shankar
Google Oneindia Tamil News

Hero Honda
சென்னை: வர்த்தக உலகில் யாரும் எதிர்ப்பார்க்காத சில அதிசயங்கள் நடப்பதுண்டு. அப்படி நடந்துள்ள ஒரு அதிசயம், சந்தையில் நல்ல மதிப்பு மிக்க பங்காகக் கருதப்படும ஹீரோ ஹோண்டா பங்குகள், 50 சதவீத தள்ளுபடி விலையில் விற்கப்பட்டுள்ளதுதான்.

ஹீரோ குழுமம், தனது முக்கிய பங்குதாரரான ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வசமிருந்த 26 சதவீத பங்குகளை 50 சதவீத தள்ளுபடி விலைக்கு வாங்கியுள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் இன்றைய நிலவரப்படி ஹீரோ ஹோண்டா பங்குகள் ரூ 1518-க்கு விற்கப்படுகின்றன. ஆனால் ஹீரோ குழுமத்துக்கு பங்கு ஒன்றுக்கு ரூ 739.97 க்கு விற்றுள்ளது ஹோண்டா நிறுவனம்.

இதன் மூலம் ஹோண்டாவின் 26 சதவீத பங்குகளுக்கு ரூ 3841 கோடியை தந்துள்ளது முஞ்ஜாலின் ஹீரோ குழுமம்.

இதன் மூலம் பல ஆண்டு கூட்டு நிறுவனமாகத் திகழ்ந்த ஹீரோவும் ஹோண்டாவும் தனித்தனியாகப் பிரிந்து செயல்படுகின்றன. வரும் 2014 வரை ஹீரோ நிறுவனம் ஹீரோ ஹோண்டா பெயரில் மோட்டார் சைக்கிள்களை விற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு ஹீரோ நிறுவனம் தனது சொந்த தொழில் நுட்பத்தில் பைக்குகளைத் தயாரித்து விற்க வேண்டி வரும்.

ஹோண்டா நிறுவனம் ஏற்கெனவே தனியாக மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் இறங்கி, வெற்றிகரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Hero Group, the 4 billion dollar motor cycle manufacturing group announced on Tuesday that it was acquiring Japanese partner Honda Motor Co's 26% stake in JV, Hero Honda, at Rs 739.97 per share, which translates into a deal size of around $851 million (Rs 3,841 crore).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X