For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திபெத் அரசியல் தலைவர் பதவியில் இருந்து தலாய் லாமா ஓய்வு: ஆன்மிகத் தலைவராக நீட்டிப்பார்

Google Oneindia Tamil News

Dalai Lama
தரம்சாலா: அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக திபெத் ஆன்மிகத் தலைவரான தலாய்லாமா இன்று தெரிவித்துள்ளார்.

தலாய் லாமா தான் அரசியல் வாழ்க்கையில் இருந்து விரைவில் ஓய்வு பெறப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அவர் தற்போது அரசியல் தலைவர் பதவியில் இருந்து விலகினாலும், தொடர்ந்து ஆன்மிகத் தலைவராக இருப்பார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

திபெத் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் தான் திபெத்திற்குத் தேவை என்று நான் 1960களில் இருந்தே வலியுறுத்தி வருகிறேன். அவ்வாறு சுதந்திரமாக தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் நான் அவரிடம் எநது பொறுப்பை ஒப்படைத்துவிடுவேன் என்று மீண்டும் மீ்ண்டும் தெரிவித்துள்ளேன். தற்போது அதற்கான நேரம் வந்துள்ளது என்றார்.

வட இந்திய நகரமான தரம்சாலாவில் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் தலாய் லாமா ஏற்கனவே அரசியல் தலைவர் பதவியில் இருந்து பாதி விலகிவிட்டதாகவே கருதுகிறார்.

English summary
Tibet's spiritual leader Dalai Lama has annouced his retirment from the active politics of Tibet. Though he steps down as the political leader, he will continue to be Tibet's spiritual leader.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X