ஹஸன் அலி ரூ71,845 கோடி வரி ஏய்ப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Hasan Ali
டெல்லி: தொழிலதிபர் ஹஸன் அலி இதுவை செய்துள்ள வரி ஏய்ப்பின் அளவு ரூ 75845 கோடி என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

புனேயைச் சேர்ந்த தொழிலதிபர் ஹஸன் அலி இதுவரை ரூ 40000 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதே அளவுக்கு வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தையும் அவர் பதுக்கியுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டு, அமலாக்கப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் செய்துள்ள வரி ஏய்ப்பு அளவு எவ்வளவு என்று அமலாக்கப்பிரிவு நேற்று அறிவித்தது.

ஹஸன் அலி மட்டும் ரூ 50329 கோடியும், அவரது மனைவி ரீமா 49 கோடியும், ரீமாவின் உதவியாளர் காஷிநாத் தபுரியா ரூ 591 கோடியும், தபுரியாவின் மனைவி சந்திரிகா ரூ 20540 கோடியும், ஆக மொத்தம் ரூ 71845 கோடியை வரி ஏய்ப்பு செய்துள்ளனராம்.

இந்தத் தொகை இந்தியாவின் மொத்த சேவை வரி வசூலை விட அதிகம்... நாட்டின் சுகாதாரத் துறை பட்ஜெட்டையும் மிஞ்சும் அளவுக்கு உள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The income tax department revealed that Hasan Ali Khan and his associates evaded around Rs 71,845 over the years. This figure which is larger than the country's health budget and its annual service tax collections.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற