For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெருந்தலைவர் மக்கள் கட்சியிலிருந்து சரத்குமார் நீக்கம்!

By Chakra
Google Oneindia Tamil News

Sarath Kumar and Radhika
சென்னை: நாடார் அமைப்புகள் இணைந்து புதிதாகத் தொடங்கிய பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் பதவிலிருந்து நடிகர் சரத்குமார் நீக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்காமலேயே திடீரென நேற்று அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இரண்டு தொகுதிகளைப் பெற்றார் சரத்குமார். இதையடுத்து அவரை கட்சியை விட்டு நீக்கியுள்ளதாக பெருந்தலைவர் மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

சரத்குமார் நடத்தி வரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரிலேயே வரும் தேர்தலை சந்திக்கவும், தேர்தலுக்குப் பின்னர் இந்தக் கட்சியின் பெயரை பெருந்தலைவர் மக்கள் கட்சி என்று மாற்றவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் நேற்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தார் சரத்குமார். அப்போது அவரது சமத்துவ மக்கள் கட்சிக்கும், அதனுடன் இணைந்த நாடார் சங்கங்களுக்குமாக மொத்தம் 2 தொகுதிகளை ஜெயலலிதா ஒதுக்கினார். அவை எந்தெந்த தொகுதிகள் என்பது விரைவில் முடிவு செய்யப்படும் என்று சரத்குமார் அறிவித்திருந்தார்.

இந் நிலையில் கட்சியின் அனுமதியில்லாமல் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், தலைவர் பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்தும் சரத்குமார் நீக்கப்பட்டுள்ளதாக பெருந்தலைவர் மக்கள் கட்சியின் உயர்மட்டக் குழு நேற்று இரவு அறிவித்தது.
கட்சியின் உயர்மட்டக்குழு நேற்று இரவு அறிவித்தது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர் எஸ்.டி.நெல்லை நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில்,

பெருந்தலைவர் மக்கள் கட்சி'யின் உயர்மட்டக்குழுவின் உறுப்பினர்கள், இந்திய நாடார் கூட்டமைப்பு தலைவர் எஸ்.டி.நெல்லை நெடுமாறன், தட்சணமாற நாடார் சங்கத்தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், மதுரை நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ், தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு நாடார் இளைஞர் பேரவை தலைவர் டி.ராஜகுமார், சென்னை வாழ்நாடார் சங்கத்தலைவர் பி.சின்னமணி நாடார், பட்டாபிராம் நாடார்கள் ஐக்கிய சங்க பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து, ஈரோடு நாடார் சங்க கெளரவத் தலைவர் ஏ.மாரியப்பன் ஆகியோர் கொண்ட அவசரக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது.

பெருந்தலைவர் மக்கள் கட்சி'யின் தலைவராக இருந்த சரத்குமார் உயர்மட்டக்குழுவின் அனுமதி இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நாட்களிலேயே தன்னிச்சையாக சென்று அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் அவர் பெருந்தலைவர் மக்கள் கட்சி'யின் தலைவர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கப்படுகிறார்.

இனி அவருக்கும், பெருந்தலைவர் மக்கள் கட்சி'க்கும் எந்தவித சம்பந்தமும், தொடர்பும் கிடையாது. பெருந்தலைவர் மக்கள் கட்சி' தனது அரசியல் மற்றும் சமுதாய பணியை தொடர்ந்து செய்யும். உயர்மட்டக் குழுவும் தமிழகத்தில் உள்ள அனைத்து நாடார் சங்கங்கள், உறவின்முறை சங்கங்களும் ஒன்று சேர்ந்து இரண்டொரு நாளில் அரசியல் தொடர்பான முடிவுகளை அறிவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Perunm talaivar makkal katchi yesterday expelled Sarathkumar from party for alligning with ADMK for the upcoming assembly polls. As the President of All India Samathuva Makkal Katchi he met AIADMK supremo Jayalalitha at her Poes Garden residence and got two seats for his party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X