For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக ஆட்சியில் ஊராட்சித் துறை செய்த சாதனைகள்-கருணாநிதி பட்டியல்

Google Oneindia Tamil News

சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையில் திமுக அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டு பெருமிதப்பட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.

சட்டசபைத் தேர்தலையொட்டி தமிழக அரசின் ஒவ்வொரு துறையும் செய்த சாதனைகளை தினசரி அறிக்கை வடிவில் பட்டியலிட்டு வருகிறார் கருணாநிதி. அதன்படி உள்ளாட்சித் துறையில் செய்த சாதனைகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கழக ஆட்சி கடந்த ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றிய சாதனைகள் திட்டங்களின் தொடர்ச்சி;

பிப்ரவரி 2006 ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 13.5.2006 வரையில் ரூ.3 கோடியாக இருந்த செலவினம், தற்போது ரூ.5440.98 கோடிக்கு மேலாக உயர்ந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 66.29 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டு, 76,312 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மிகச்சிறப்பாக செயல்படுத்தியதில் சிறந்த 22 மாவட்டங்களில் கடலூர், சிவகங்கை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்று புது டில்லியில் 2007 08 ம் ஆண்டிற்கான விருதைப் பெற்றுள்ளன. நாகப்பட்டினம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைப் போன்ற 26 மாவட்டங்கள் 2008 09 ம் ஆண்டிற்கான விருதினையும், 2009 2010 ம் ஆண்டிற்கான தேசிய விருதினை திருவண்ணாமலை மாவட்டமும் பெற்றுள்ளது.

2006 ல் சமத்துவபுரம் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தி, மொத்தம் 240 சமத்துவபுரங்களில் இதுவரை 210 சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டுள்ளன; எஞ்சிய சமத்துவபுரங்களின் கட்டுமானப் பணிகளும் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 2007 2008 முதல் ரூ.106.42 கோடி மக்கள் பங்களிப்புடன் ரூ.239.51 கோடி மதிப்பீட்டில் 8,132 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு; 7,254 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ரூ.3,854.29 கோடி மதிப்பீட்டில் 33,066 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப்பணிகள் எடுக்கப்பட்டு; 29,235 கிலோ மீட்டர் நீளச் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு எஞ்சிய பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

2008 2009 ம் ஆண்டு, "ஊரக கட்டமைப்புத் திட்டம்'' என்ற புதிய திட்டம் ரூ.350 கோடி நிதி ஒதுக்கீட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் படி, ஒவ்வொரு ஆண்டும் ரூ.380 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2010 2011 ம் ஆண்டில் ரூ.380 கோடி நிதி ஒதுக்கீட்டில் 47,478 பணிகள் நிறைவேற்றப்படுகின்றன.

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி ரூ.1 கோடியாக இருந்தது படிப்படியாக உயர்த்தப்பட்டு, 2010 2011 ம் ஆண்டில் ரூ.1.75 கோடியாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 2006க்குப் பின் ரூ.1727.25 கோடி செலவில் 1,59,583 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 1,50,263 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டுத் திட்டதின்கீழ் ரூ.570 கோடி மதிப்பீட்டில் 18,500 பணிகள் மேற்கொள்ளப்பட்டு; 17,055 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

முழு சுகாதார இயக்கம் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டமைக்காக 2006 2007 முதல் 2213 கிராம ஊராட்சிகளில் நிர்மல் கிராம் புரஸ்கார் விருதுகளைப் பெற்றன. இத்திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றிச் சாதனை படைத்ததில் 2007 2008 ல் தமிழகம் இந்தியாவில் இரண்டாம் இடம் பெற்றது.

உதவி இயக்குநர் முதல் மக்கள் நலப்பணியாளர்கள் பணியிடம் வரை இருந்த 17,819 காலிப்பணியிடங்களை நிரப்பிட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு; 17,549 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 270 காலிப் பணி இடங்களை விரைவில் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித் துறையில் தொழில் நுட்பப் பிரிவை வலுவூட்டும் வகையில் மொத்தம் 3380 அலுவலர்கள் தொழில்நுட்பப் பிரிவில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 12,653 மக்கள் நலப் பணியாளர்களும், 1.6.2006 முதல் மீண்டும் இந்த அரசினால் நியமனம் செய்யப்பட்டனர்.

மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 31.12.2010 வரை 75,66,497 மகளிரை உறுப்பினராகக் கொண்ட 4,88,970 சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இவர்களின் மொத்த சேமிப்பு ரூ.2658 கோடி ஆகும். இவற்றுள் 26,94,682 மகளிரை உறுப்பினராகக் கொண்ட 1,75,493 புதிய சுயஉதவிக் குழுக்கள் ஜுலை 2006 க்குப்பின் உருவாக்கப்பட்டன.

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தால் 43,304 சுயஉதவிக் குழுக்கள் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. 23,886 சுயஉதவிக் குழுக்கள்; குழுக்கள் அதிகம் அமைக்கப்படாத கிராம ஊராட்சிகளிலும், 41,373 சுயஉதவிக் குழுக்கள் நகர்ப்புறத்தில் குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களைக் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளன.

2006 07 ம் ஆண்டு முதல், நகர்ப்புற சுயஉதவிக் குழுக்களுக்குச் சுழல் நிதி வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி, 5 ஆண்டுகளில் 96,699 நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.96.70 கோடி சுழல் நிதி மானியமாக வழங்கப்பட்டது. 2008 09 ம் ஆண்டில் சுழல் நிதி மானியம் பெறாத, அனைத்து 1,50,000 சுய உதவிக் குழுக்களுக்கும் வங்கிக் கடனுடன் ரூ.150 கோடி சுழல்நிதி வழங்கப்பட்டது. 2009 10ம் ஆண்டில் 70,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.70 கோடி சுழல் நிதி மானியமாக வழங்க அனுமதி தந்து, 69,000 சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்பட்டது.

2010 11 ம் ஆண்டில் 50,000 ஊரக சுய உதவிக் குழுக்களுக்கும் 20,000 நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கும், சுழல்நிதி மானியம் வழங்க ரூ.70 கோடி அனுமதிக்கப்பட்டு; இதுவரை, 63,967 சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடனாக ஜுன் 2006 க்குப் பின் ரூ.7756.13 கோடி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை வள்ளூவர் கோட்டம் அருகில் ரூ.15.33 கோடி செலவில் சுய உதவிக்குழுக்களின் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு நிரந்தர சந்தை வளாகம் கட்டப்பட்டுள்ளது. மேலும் இதைப் போல ஊரகப் பகுதியில் ஒரு மாவட்டத்திற்கு மூன்று என்ற விகிதத்தில் 86 கிராம விற்பனை மையங்கள் ரூ. 12.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன.

மாநில அளவில் சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கான விருதுத் தொகை ரூ.ஒரு லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாகவும், சிறந்த சுய உதவிக் குழுக்களுக்கான விருதுத் தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.ஒரு லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கான விருதுத் தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.ஒரு லட்சமாகவும், சிறந்த சுயஉதவிக் குழுக்களுக்கான விருதுத் தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

English summary
CM Karunanidhi has listed out his govt's achievement in Rural development and Panchayat department. CM is releasing a achievement statement daily due to the Assembly polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X