For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காபித்தூள் விலை ரூ 50 உயர்வு!

By Shankar
Google Oneindia Tamil News

Filter Coffee Price Hike
பெங்களூர்: பில்டர் காபி பிரியர்களுக்கு இது நிச்சயம் கசப்பான செய்திதான்... காரணம், காபியின் விலை கிலோவுக்கு ரூ 50 உயர்ந்துள்ளது!

பில்டர் காபித்தூள் தயாரிக்கத் தேவைப்படும் காபிக் கொட்டை விலை கடந்த ஆகஸ்ட்டில் கிலோ ரூ 160 ஆக இருந்தது. இது சட்டென்று ரூ 55 வரை உயர்ந்து ரூ 215 ஆனது.

இப்போது கிலோ ரூ 270 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பில்டர் காபித்தூளின் விலையும் உயர்ந்துள்ளது.

வழக்கமாக ரூ 320 முதல் 350 வரை விற்கப்பட்டு வந்த பில்டர் காபித் தூள் இனி ரூ 400 -க்கு விற்கப்படும் என்று காபித் தூள் தயாரிப்பார் சங்கத்தின் செயலர் சூர்ய பிரகாஷ் அறிவித்துள்ளார். இந்த விலை உயர்வு இன்ஸ்டன்ட் காபித் தூளுக்கும் பொருந்தும் என்று தெரிகிறது

இந்த விலை உயர்வை இந்தியாவின் முக்கிய பில்டர் காபி தயாரிப்பாளர்களான டாடா பீன்ஸ், கோத்தாஸ் மற்றும் பேயர்ஸ் காபி ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். நெஸ்லே மற்றும் ப்ரூ தயாரிப்பாளர்கள் இதுபற்றி எதுவும் கூறவில்லை.

உலகில் அதிக அளவு காபி விளையும் நாடுகளில் ஒன்று இந்தியா. பிரேசில், இந்தோனேஷியா மற்றும் கொலம்பியாவும் அதிக அளவு காபி உற்பத்தி செய்கின்றன.

English summary
The price of filter coffee is rising up to Rs 50 per kg due to the sudden rise in the price opf raw arabica. Now the retail price for filter coffee will be around Rs 350-400 per kg, according to Coffee Roasters' Association of India, B S Surya Prakash.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X