For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மார்க்கெட்டைக் கலக்க வரும் கத்ரினா பார்பி பொம்மைகள்!

By Shankar
Google Oneindia Tamil News

Katrina Kaif
டெல்லி: மெக்டொனால்ஸ், கேஎப்சி, கோக் போல, பார்பி பொம்மைகள் மேலை நாடுகளில் ரொம்பவே பிரசித்தம். கிட்டத்தட்ட அவர்களின் கலாச்சார அடையாளங்களுள் ஒன்றாகிவிட்டது இந்த பார்பி (இதைச் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகளும் உண்டு).

நாம்தான் அவர்களின் பழக்கங்கள், அடையாளங்களை பெருமையோடு எடுத்து சூடிக் கொள்வதில் தனி சந்தோஷம் கொள்பவர்களாச்சே... இதோ, பார்பி பொம்மைகள் முழுவீச்சில் இந்தியாவுக்கும் வந்துவிட்டன.. இப்போது அடுத்த கட்டமாக, இந்திய நடிகைகளின் மாடலில் பார்பிகளை உருவாக்க ஆரம்பித்துள்ளனர்.

முதல்கட்டமாக, பாலிவுட்டின் பிரபல நடிகை கத்ரீனா கைஃப்பை அச்சில் வார்த்தது போல இந்த பார்பிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த 2009-ல் பார்பி பொம்மை பிறந்து 50 ஆண்டுகளானதையொட்டி நடந்த சிறப்பு பேஷன் ஷோவில் பார்பி போல உடையணிந்து வந்தார் கத்ரீனா. எனவே இந்தியாவுக்கான பார்பிகளை கத்ரீனா போல உருவாக்கியுள்ளனராம். இந்திய நடிகர்களில் கத்ரீனாவுக்கு மட்டும்தான் பார்பி மாடல் என்ற பெருமையும் கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் மட்டெல் இன்கார்ப்பரேட் நிறுவனம்தான் இந்த பார்பியை தயாரிக்கிறது. முதல் பார்பியை உருவாக்கியவர் ருத் ஹாண்ட்லர். இன்று 150 நாடுகளில் பல பில்லியன் டாலர் வர்த்தகத்தை ஈட்டும் சக்தி மிக்கதாகத் திகழ்கிறது பார்பி.

English summary
The Katrina Kaif look-alike Barbie doll is all set to hit the markets in India by March. Kaif is the first Bollywood actor to be crafted in the form of a Barbie Doll. She had also walked the ramp as a Barbie during the 50th Birthday celebrations of the iconic toy in 2009.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X