For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு தள்ளிவைப்பு

Google Oneindia Tamil News

சென்னை: இன்று வெளியிடப்படுவதாக இருந்த திமுக வேட்பாளர் பட்டியல் நாளை(17-ம் தேதி) வெளியிடப்படும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

திமுக கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி ஒதுக்கீடு இன்னும் இழுத்துக் கொண்டிருக்கிறது. மேலும் சில கட்சிகளுடன் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருப்பதால் வேட்பாளர் பட்டியல் நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்பட்டன. கொங்குநாடு முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக திமுக கூட்டணிக்கு கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், அதிமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறினால் அவர்களுடன் தனிக் கூட்டணி அமைக்கத் தயார் என்று கார்த்திக் அறிவித்துள்ளார்.

English summary
DMK has postponed the date of announcing the candidates list to tomorrow. Earlier it has planned to annouce it on march 16. Since it hasn't finished finalising the constituencies with some of the parties in its alliance, the candidates list will be released tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X