For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவுடன் சமரசம் ஏற்படாவிட்டால் 3வது அணிக்கு வாய்ப்பு

By Chakra
Google Oneindia Tamil News

vijayakanth, Vaiko, Krishnasamy, Tha Pandian,G Ramakrishnan and Dr Sethuraman
சென்னை: திமுக அணியில் புயல் அடித்து ஓய்ந்த நிலையில் தற்போது அதிமுக முகாமில் எழுந்துள்ள அரசியல் சூறாவளியில் சிக்கி தூக்கி வீசப்பட்டுள்ள கட்சிகள் இணைந்து 3வது அணி அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாகியுள்ளன.

இந்தக் கட்சிகள் இணைந்து 3வது அணி அமைத்தால் எந்தெந்த கட்சிகள் அதில் சேரும் என்பது குறித்த ஒரு பார்வை...

கேட்ட தொகுதிகளை அதிமுக தராவிட்டால் தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, புரட்சி பாரதம், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி, பார்வர்ட் பிளாக், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி ஆகியவை இணைந்து 3வது அணியை உருவாக்கலாம்.

இந்த அணிக்கு தேமுதிக தலைமை தாங்கலாம்.

மேற்கண்ட கட்சிகளில் புதிய பாரதம் கட்சி, திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. கேட்ட இடம் கொடுக்காததால் அது அங்கிருந்து வெளியேறியது. மற்ற கட்சிகள் அனைத்தும் அதிமுகவை நம்பி மோசம் போனவையாகும்.

இவர்களில் சிபிஎம்முக்கு 12 இடங்கள் தந்தது அதிமுக. ஆனால் கடந்த தேர்தலில் அவர்கள் போட்டியிட்ட 8 தொகுதிகளில் 6 தொகுதிகளைப் பறித்து விட்டது. அதேபோல சிபிஐக்கு 10 இடங்களைக் கொடுத்தது. ஆனால் கடந்த முறை வென்ற 6 தொகுதிகளையும் இந்த முறை தரவில்லை.

மதிமுக 21 தொகுதிகளைக் கேட்டது. ஆனால் 8 அல்லது 9க்கு மேல் முடியவே முடியாது என்று கூறி கடைசியில் ஒன்றும் இல்லாமல் செய்து விட்டது.

புதிய தமிழகத்திற்கு 2 சீட் கொடுத்த ஜெயலலிதா, அவர்கள் கேட்ட தொகுதிகளைத் தர முடியாது என்று கூறி விட்டது. டாக்டர் சேதுராமன் கட்சிக்கும் இதே நிலைதான். பார்வர்ட் பிளாக் கட்சி உசிலம்பட்டியைக் கேட்டது. ஆனால் அங்கு அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டதால் அது ஆத்திரமடைந்துள்ளது.

கார்த்திக்கின் நாடாளும கட்சியை கடைசி வரை பேச்சுவார்த்தைக்கே கூப்பிடவில்லை அதிமுக. இதனால் முதல் ஆளாக அவர் நேற்றே வெளியேறி விட்டார்.

தேமுதிகவைப் பொறுத்தவரை 41 சீட் வரை கொடுப்பதாக கூறியது அதிமுக. ஆனால் அவர்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்க முன்வரவில்லை. அதாவது அவர்கள் கண்டிப்பாக தேவை என்று கேட்ட 21 தொகுதிகளை தர அதிமுக மறுத்து விட்டது.

3வது அணி உருவானால், அதிமுக கூட்டணில் அந்தக் கட்சியைத் தவிர்த்து சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும், மனித நேய மக்கள் கட்சியும் மட்டுமே மிச்சமிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
DMDK is expected to lead the third front in coming polls. This front may include CPM, CPI, Muventhar Munnetra Munnani, Puthiya Tamilagam, Puratchi Bharatham, Forward bloc and Karthick's All India Naadalum Makkal katchi. Sarath Kumar's Samathuva Makkal katchi also expected to join the alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X