For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக். நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து- 6 பேர் பலி, 50 பேர் மாயம்: மீட்புப் பணி தீவிரம்

By Siva
Google Oneindia Tamil News

பலுசிஸ்தான்: பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீதேன் வாயு கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 6 பேர் பலியாகினர். மேலும், 50 பேர் சுரங்க இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். ஆனால் அவர்கள் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிக்க குறைவு என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் தெனமேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள நிலக்ககரி சுரங்கம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீதேன் வாயு கசிவால் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சுரங்கத்தை அம்மாநில அரசு நடத்தி வந்தது.

இது குறி்த்து அப்பகுதி சுரங்கங்களின் தலைமை கண்காணிப்பாளர் முகமது இப்திகார் கூறியதாவது,

அந்த சுரங்கத்தில் மூன்று முறை வெடிவிபத்து நடந்துள்ளது. இது நடந்தபோது சுரங்கத்திற்குள் 59 பணியாளர்கள் இருந்தனர்.

இதுவரை 6 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்த சுரங்கம் மிகவும் ஆழமானது என்பதால் அதில் சிக்கியுள்ளவர்கள் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை என்றார்.

பாகிஸ்தான் சுரங்களில் இது போன்ற வெடிவிபத்து சம்பவங்கள் நடப்பது அரிது. பாகிஸ்தானின் நிலக்கரி சுரங்கங்கள் பெரும்பாலும் சிந்த் மாகாணத்திற்கு அருகில் உள்ள பலுசிஸ்தானில் தான் அமைந்துள்ளன. அங்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இருந்திருக்கலாம்.

பாகிஸ்தானில் 184 பி்ல்லியன் டன்னுக்கும் அதிகமாக நிலக்கரி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 4 மில்லியன் டன் நிலக்கரி எடுக்கபப்டுகிறது அவை பெரும்பாலும் செங்கல் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும்.

English summary
A coalmine in Pakistan's southwestern province of Baluchistan blasted on last sunday killing 6 workers and trapping over 50 miners. Since the mine is deep the trapped peope's chance of survival is less. Methane gas sparked three explosions in the mine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X