For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சி, திருத்தணியில் 102 டிகிரி வெயில்: வேலூரில் 99

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: திருச்சி, திருத்தணியில் நேற்று 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.

தமிழகத்தில் கோடை காலம் துவங்கியதில் இருந்தே பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. தகிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். இந்நிலையில் திருச்சி, திருத்தணியில் நேற்று வெயில் 102 டிகிரியை எட்டியது.

மாநிலத்தின் முக்கிய இடங்களில் பதிவான வெயில் அளவு(டிகிரி ஃபாரன்ஹீட்டில்),

வேலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை 99, தருமபுரி 97, சென்னை, சேலம் 95, கடலூர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், புதுச்சேரி, கோயம்புத்தூர் 93.

இதற்கிடையே இன்று தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களல் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை அதிகபட்சம் 93 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும் என்று அது மேலும் தெரிவித்துள்ளது.

English summary
The temperature in Trichy and Thiruthani have risen to 102 degree fahrenheit yesterday. Vellore which is known for the scorching sun has 99 degree. Chennai meteorological center has told that TN and Puducherry may have rain with thunder and lightning today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X