For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவின் அந்நியச் செலாவணி 286 மில்லியன் டாலர் குறைந்தது!

By Shankar
Google Oneindia Tamil News

மும்பை: இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு இன்றைய நிலவரப்படி 307.92 பில்லியன் டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 286 மில்லியன் டாலர் குறைவாகும்.

இதில் வெளிநாட்டு நாணய இருப்பு மட்டும் 277.37 பில்லியன் டாலர் (முந்தைய ஆண்டை விட 377 மில்லியன் டாலர் குறைவு) ஆகும். தங்க இருப்பு 22.97 பில்லியன் டாலர் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஐஎம்எப்பில் இந்தியாவுக்கு உள்ள எஸ்டிஆர் எனப்படும் சிறப்பு எடுப்பு உரிமையின் அளவு 15 மில்லியன் டாலர் அதிகரித்து, 4.605 பில்லியன் டாலராக உள்ளது.

இந்தத் தகவல்களை மத்திய ரிசர்வ் வங்கி சனிக்கிழமை அறிவித்தது. ஏற்கெனவே இந்தியாவில் அந்நிய முதலீடுகள் அளவும் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
The country's foreign exchange reserves declined by $286-million to $307.92-billion following fall in foreign currency assets during the week ending April 15. Foreign currency assets, the biggest component of the foreign reserves were down $311-million to $277.37-billion for the week ended April 15, the Reserve Bank said in its weekly data released last evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X