For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோடை மழை: புளியங்குடியில் எலுமிச்சை விலை சரிவு-விவசாயிகள் கவலை

By Chakra
Google Oneindia Tamil News

புளியங்குடி: தமிழகம் மற்றும் கேரளாவில் தொடரும் கோடை மழையால் புளியங்குடி எலுமிச்சை மார்க்கெட்டில் ஆயிரம் பழங்கள் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.2 ஆயிரத்து 500-க குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் எலுமிச்சை உற்பத்தி, விற்பனையில் நெல்லை மாவட்டம் புளியங்குடி முன்னிலை வகிக்கிறது. புளியங்குடி டிஎன் புதுக்குடியில் தனியார் வணிக வளாகத்தில் 29 கடைகளில் ஏலம் மூலம் எலுமிச்சை விற்பனை நடந்து வருகிறது. ஆண்டு தோறும் இங்கு எலுமிச்சை உற்பத்தி செய்யப்பட்டாலு்ம் கோடை காலத்தில் தான் அதிக மவுசு இருக்கும். சாதாரண நேரங்களில் ஆயிரம் பழங்கள் ரூ.500-ல் இருந்து ரூ.800 வரை ஏலம் மூலம் விற்பனையாகும் நிலையில் கோடை காலத்தில் ரூ.3 ஆயிரம் வரை விலை கிடைக்கும்.

கோடை வெயிலி்ன் தாக்கத்தால் கடந்த மாதம் ஆயிரம் பழங்கள் ரூ.3 ஆயிரத்து 800 வரை விற்பனையானது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் தமிழகம், கேரளாவில் கோடை மழை பெய்து வருவதால் எலுமி்ச்சை விலை சரியத் தொடங்கியுள்ளது. மழைக்கு முன்பு வரை ஆயிரம் பழங்கள் ரூ.3 ஆயிரம் வரை விற்பனையான நிலையில் நேற்று ரூ.2 ஆயிரத்து 500-க குறைந்துள்ளது. மழை நீடிக்கும் பட்சத்தில் தொடர்ந்து எலுமிச்சை விலை குறையுமோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

English summary
Lemon price has gone down ahead of the summer rain in Tamil Nadu. Before the rain farmers have got Rs. 3,000 for 1,000 lemon but now they are getting Rs. 2, 500 only. The price may further decrease if the rain continues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X