For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குற்றப்பத்திரிகையில் கனிமொழி: திமுகவுடனான உறவை பாதிக்காது-காங்கிரஸ்

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi and Sonia
டெல்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் திமுக எம்பி கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால், திமுக-காங்கிரஸ் உறவு பாதிக்கப்படாது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஸ் திவாரி கூறினார்.

அவர் கூறுகையில், 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு தொடர்பான சிபிஐ விசாரணைக்கும் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த விசாரணையில், மத்திய அரசு எந்த காலகட்டத்திலும் தலையிடவில்லை. சிபிஐ சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. அதற்கும் அரசியல் கூட்டணிக்கும் தொடர்பு இல்லை. அரசியலில் சூழ்நிலைதான் கூட்டணியை நிர்ணயிக்கிறது.

குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால் திமுகவுடன் உள்ள உறவில் பாதிப்பு வராது. எனவே திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும். 2006ம் ஆண்டு தமிழகத் சட்டசபை தேர்தலையும், 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலையும் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து சந்தித்தோம். இரண்டு தேர்தலிலும் எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.

இப்போது 2011ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலையும் கூட்டணி அமைத்து சந்தித்து இருக்கிறோம். இந்த தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும்.

துணை குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால் உடனே அவரை கைது செய்துவிட முடியாது. முறைகேடு நடந்ததில் அவருக்கு பங்குண்டா என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்த பிறகு சட்டப்படிதான் எதுவும் செய்ய முடியும்.

குற்றப்பத்திரிகையில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் பெயர் இடம் பெறாததற்கு எந்தவித அரசியல் நிர்ப்பந்தமும் காரணமல்ல. சிபிஐ எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படுவதை சுப்ரீம் கோர்ட் கண்காணித்து வருகிறது.

இதில் மத்திய அரசு எந்த விதத்திலும் தலையிடவில்லை. சுப்ரீம் கோர்ட் நேரடியாக கண்காணிப்பதால் குற்றப்பத்திரிகையை சரியாக தயாரிக்காமல் தவிர்க்க முடியாது.
இந்த முறைகேட்டில் தயாளு அம்மாளுக்கு தொடர்பு இல்லை என்பதால் அவரை குற்றப்பத்திரிகையில் சிபிஐ சேர்க்காமல் விட்டிருக்கலாம் என்றார்.

English summary
The Congress Monday said there was no threat to the UPA government after the Central Bureau of Investigation - included the name of DMK chief M. Karunanidhi's daughter Kanimozhi as a co-conspirator in the high-profile second generation - telecom spectrum case. The DMK is a key ally of the government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X