For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்

By Siva
Google Oneindia Tamil News

சிதம்பரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு சிதம்பரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குமாரக்குடியில் கடந்த 1997ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திருமா, அரசை எதிர்த்தும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று தொல்.திருமாவளவனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் தொல்.திருமாவளவன் கோர்ட்டில் ஆஜராக வில்லை. இந்நிலையில் இவ்வழக்கில் நேற்று திருமாவளவனுக்கு சிதம்பரம் சப்-கோர்ட்டு நீதிபதி திருநாவுக்கரசு, பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

English summary
Chidambaram court has issued arrest warrant against VCK chief Thirumavalavan. He was supposed to appear before the court in connection with a general meeting case but he didn't turn up. So, the court has issued arrest warrant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X