For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மே 2ல் நெல்லை-மும்பை வாரந்திர சி்றப்பு ரயில் சேவை துவக்கம்

By Siva
Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லையில் இருந்து திருவனந்தபுரம் வழியாக மும்பைக்கு கோடைகால சிறப்பு ரயில் சேவை வரும் மே மாதம் 2-ம் தேதி தொடங்குகிறது.

கோடை காலத்தில் பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நெல்லையிலிருந்து மும்பைக்கு லோக்மான்யா திலக் ரயில் நிலையம் வரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை வரும் மே மாதம் 2-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த ரயில் திங்கட்கிழமை தோறும் நெல்லையில் இருந்து மதியம் ஒரு மணிக்கு புறப்பட்டு செல்லும். மறுநாள் (செவ்வாய்கிழமை) 11.45 மணிக்கு லோக்மான்யா திலக் ரயில் நிலையம் சென்றடையும். இந்த சிறப்பு ரயில் மே 2-ம் தேதி முதல் ஜூன் 6-ம் தேதி வரை வாரந்தோறும் இயக்கப்படுகிறது.

இதேபோல் மறுமார்க்கத்தில் லோக்மான்யா திலக் ரயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமை தோறும் மதியம் 12.50 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 2-15 மணிக்கு நெல்லை வந்தடையும். இந்த ரயில் வருகிற 30-ம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரை வாரந்தோறும் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்களில் 3 அடுக்கு ஏசி பெட்டிகள் 2, 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 13, பொது பெட்டிகள் 4 என 19 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். நாகர்கோவில், திருவனந்தபுரம், காயன்குளம், செங்கனூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம், ஆல்வா திருச்சூர், சொரனூர், கண்ணூர், காசரக்கோடு, மங்களூர் சந்திப்பு, உடுப்பி மூகாம்பிகை ரோடு, அன்கோலா, கார்வார், ரத்னகிரி, பன்வால் ஆகிய இடங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

English summary
Southern railway has provided special weekly train from Tirunelveli to Mumbai from may 2 till june 4. It will start from Tirunelveli on every monday and will reach Mumbai on the next day. Likewise it will start from Mumbai on every saturday and reaches Tirunelveli on monday morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X