For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

13வது முறையாக வென்று சாதனை படைப்பாரா கருணாநிதி?

Google Oneindia Tamil News

karunanidhi
சென்னை: 12 முறை சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று சாதனையுடன் வலம் வரும் முதல்வர் கருணாநிதி 13வது முறையாக போட்டியிடும் திருவாரூரில் வென்று புதிய சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

முதல்வர் கருணாநிதி பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். அதில் ஒன்று 12 முறை சட்டசபைத் தேர்தல்களில் தொடர்ந்து வென்று வருவது.

தற்போது 13வது முறையாக தேர்தல் களத்தில் நிற்கிறார் முதல்வர் கருணாநிதி. இம்முறை தான் பிறந்த மண்ணை உள்ளடக்கிய திருவாரூரில் தேர்தல் களம் கண்டுள்ளார் கருணாநிதி.

கருணாநிதி இதுவரை வென்ற தொகுதிகள்:

1957 - குளித்தலை
1962 - தஞ்சாவூர்
1967 - சைதாப்பேட்டை
1971 - சைதாப்பேட்டை
1977 - அண்ணா நகர்
1980 - அண்ணா நகர்
1989 - துறைமுகம்
1991 - துறைமுகம்
1996 - சேப்பாக்கம்
2001 - சேப்பாக்கம்
2006 - சேப்பாக்கம்

இதுவரை தமிழகத்தின் எந்த அரசியல் தலைவரும் இதுபோல அதிக முறை வெற்றி பெற்றதில்லை. மேலும் தொடர்ச்சியாகவும் வென்றதில்லை. அதேபோல தோல்வியே காணாத ஒரே தலைவராக திகழ்பவர் கருணாநிதி மட்டுமே. தற்போது 13வது முறையாக களம் காணும் கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்தும் புதிய சாதனை படைத்தவர். தற்போது திமுக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால் 6வது முறையாக முதல்வர் பதவியில் புதிய சாதனையை அவர் படைப்பார்.

இப்படி சாதனை நாயகனாக வலம் வரும் கருணாநிதி, மேலும் சாதனைகளைப் படைக்க திருவாரூர் வழி காட்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் திமுகவினர் உள்ளனர்.

English summary
CM Karunanidhi is awaiting for unique fete in the assembly polls. 'Kalaignar', as fondly called by DMK cadres and Tamils, Karunanidhi is contesting in the assembly polls for record 13th time. This time he has contested in Thiruvarur, his birth place. If Karunanidhi wins in Thiruvarur, this will become a great record for him and DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X