வீடடுக் காவல்: 4 படுக்கையறை கொண்ட புதுவீட்டில் குடியேறிய ஸ்ட்ராஸ் கான்!

Subscribe to Oneindia Tamil

Dominique Strauss Kahn
நியூயார்க்: பாலியல் புகாரால் பதவியை ராஜினாமா செய்த சர்வதேச செலாவணி நிதிய முன்னாள் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் தற்காலிகமாக குடியிருந்த இடத்தைக் காலி செய்தார்.

இப்போது அவர் விசாலமான புதிய வீட்டுக்குக் குடியேறியுள்ளார். மன்ஹாட்டனில் 4 படுக்கை அறைகள் கொண்ட வீட்டுக்கு அவர் மாறியுள்ளார்.

ஸ்ட்ராஸ் கான் ஹோட்டல் பணிப்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனால் அவர் தனது ஐஎம்எப் தலைமைப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டி வந்தது.

இப்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும் விசாரணை முடியும்வரை அவர் தொடர்ந்து வீட்டுக் காவலில் வைக்கப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெரும் பணக்காரர்கள் குடியிருக்கும் பகுதிகளில் ஒன்றான காபல்ஸ்டோன் வீதியில் அவர் இப்போது குடியேறியுள்ள அந்த புதிய வீடு அமைந்துள்ளது.

விசாரணை முடியும் வரையில் இந்த சொகுசு பங்களாவில் அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருப்பார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+