For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தயாநிதி மாறன் உள்பட 85 பேரிடம் விசாரணை நடத்த ஜேபிசி முடிவு

Google Oneindia Tamil News

Dayanidhi Maran
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சரும், தற்போதைய ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறனை நேரில் வரவழைத்து விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு தீர்மானித்துள்ளது.

தயாநிதி மாறன் மட்டுமல்லாமல் இதற்கு முன்பு இருந்த அனைத்துத் தொலைத் தொடர்பு அமைச்சர்களையும் வரவழைத்து விசாரிக்கவும் ஜேபிசி தீர்மானித்துள்ளது.

அதன்படி ராசாவும் ஜேபிசி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவுள்ளார். மொத்தம் 85 சாட்சியங்களை விசாரிக்கவுள்ளது ஜேபிசி. முன்னாள் பாஜக அமைச்சர்களான அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோரும் இதில் அடக்கம். இவர்கள் வாஜ்பாய் அமைச்சரவையில் தொலைத் தொடர்புத்துறையை பார்த்தவர்கள்.

மாறன், ராஜா மட்டுமல்லாமல் அப்போல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்படவுள்ளது. இதை ஜேபிசி தலைவர் பி.சி.சாக்கோ நேற்று உறுதிப்படுத்தினார். ஏர்செல் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர் பிரதாப் சி ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் தற்போது அதிக நெருக்கடிக்குள்ளாகியிருப்பவர் தயாநிதி மாறன்தான். இவர் மீது ஏர் செல் முன்னாள் தலைவர் சிவசங்கரன் கடுமையான புகார்களைக் கூறியுள்ளார். இதை முக்கிய சாட்சியமாக சிபிஐ எடுத்துக் கொண்டுள்ளது.தயாநிதி மாறன் மீது வழக்கு தொடரவும் அது தயாராகி வருகிறது. பிரதமரின் அனுமதிக்காக தற்போது அது காத்திருக்கிறது.

மேலும் நேற்று சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங் நேற்று ஜேபிசி முன்பு ஆஜராகி தயாநிதி மாறனின் பங்கு குறித்து விளக்கியுள்ளார். இந்த அடுத்தடுத்த நிகழ்வுகளால் தயாநிதி மாறனுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.

விரைவில் தயாநிதி மாறன் பதவி விலகுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் விலகாவிட்டால் அடுத்த அமைச்சரவை மாற்றத்தின்போது அவர் நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தயாநிதி மாறன் மீது சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்தால் உடனடியாக அவரை பதவியிலிருந்து விலகுமாறு பிரதமர் உத்தரவிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Former telecom minister Dayanidhi Maran, currently the textiles minister and his successor in the telecom ministry A Raja will depose before the JPC which will summon a total of 85 witnesses. Included among the witnesses would be representatives of top industrialists and BJP members like Arun Shourie and Yashwant Sinha who served as telecom ministers during the NDA regime.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X