For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆம்னி பஸ் விபத்தில் உயிரிழந்த 15 பேரின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

வேலூர்: வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 22 பேரில் 15 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து திருப்பூர் சென்ற கேபிஎன் நிறுவன ஆம்னி பேருந்து, வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே அவலூர் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் டிரைவர் நாகராஜ் மற்றும் பயணி ஒருவரைத் தவிர மற்ற 22 பேரும் உயிருடன் கருகி பிணமானார்கள்.

இந்த விபத்தில் உயிரிழந்த 22 பேரின் உடல்களும் வாலாஜா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. டிக்கெட்களை வைத்து உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

இதுவரை 15 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை உறவினர்களிடம் போலீஸார் ஒப்படைத்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த 22 பேரில், 14 பேர் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர்கள். 4 பேர் உடுமலை மற்றும் 4 பேர் திருப்பூரைச் சேர்ந்தவர்களாவர்.

English summary
15 bodies have been identified in Kaveripakkam KPN omni bus accident. All 15 bodies have been handed over to the relatives. In total, 22 persons were charred to death in the accident. Among them 14 are from Pollachi, 4 each from Tirupur and Udumalai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X