For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜூன் 16-ம் தேதி பெட்ரோல் விலை 50 பைசா உயர்வு!

By Shankar
Google Oneindia Tamil News

Petrol Price
டெல்லி: பெட்ரோல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளன பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள்.

பெட்ரோல் விலையை தன்னிச்சையாக உயர்த்தி வருகின்றன பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள். இதுவரை 10 மாதங்களில் 10 முறை விலையை உயர்த்தி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

இப்போது மீண்டும் விலையை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன.

வரும் ஜூன் 16-ம் தேதி முதல் லிட்டருக்கு 50 காசுகளை உயர்த்தப் போவதாக அவை அறிவித்துள்ளன .

மேலும், 7 ரூபாய் வரை விலையை உயர்த்தினால்தான் பெட்ரோல் விற்பனையில் நஷ்டம் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என இவை கூறி வருகின்றன.

கடந்த மே 15-ம் தேதிதான் லிட்டருக்கு ரூ 5 வரை பெட்ரோல் விலை உயர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கு மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

டீஸல் விற்பனையில் பெரும் நஷ்டம் ஏற்படுவதால், விரைவில் லிட்டருக்கு ரூ 14 வரை உயர்த்த மத்திய அரசிடம் அனுமதி கேட்டு காத்திருக்கின்றன எண்ணெய் நிறுவனங்கள். சமையல் எரிவாயு விலையை ரூ 50 வரை உயர்த்தப் போவதாகவும் கூறி வருகின்றன.

English summary
State-owned oil firms may hike petrol price by about Rs 0.50 per litre from June 16 as last month's steep increase in rates is not enough to cover the cost of raw material (crude oil).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X