For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜூலை 11ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்?

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் ஜூலை 11ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் 40 நாட்கள் நடக்கவுள்ளது. கூட்டத் தொடர் தொடங்கும் 11ம் தேதியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் 7வது மாதத்தில் இருந்து 6 தவணையாக மொத்தம் ரூ. 6,000 வீதம் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.12,000 நிதி உதவி வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இதன்படி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக ஏழை கர்ப்பிணிகளுக்கு ரூ. 12,000 நிதி உதவி வழங்கும் உத்தரவை அரசு விரைவில் பிறப்பிக்க உள்ளது. இதன்படி ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் 7வது மாதத்தில் இருந்து தலா ரூ.2,000 வீதம் 6 தவணையாக மொத்தம் ரூ. 12,000 வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் சுகாதார துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் அதிகாரிகளை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தினார்.

அதேபோல தமிழகம் முழுவதும் 50 லட்சம் ஏழை பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த சுகாதார துறை முடிவு செய்துள்ளது.

English summary
TN government is planning to have budget session from july 11. The session is expected to continue for atleast 40 days. ADMK government has planned to get addtional fund from centre to implement more schemes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X