For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிறிஸ்டைன் லகார்ட் ஐஎம்எப் தலைவராக எதிர்ப்பு!

By Shankar
Google Oneindia Tamil News

நியூயார்க்: சர்வதேச நிதி அமைப்பான ஐ.எம்.எப்-ன் தலைவர் பதவிக்கு பிரான்ஸின் நிதி அமைச்சரான கிறிஸ்டைன் லகார்ட் தேர்வு செய்யப்படுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஐரோப்பாவைச் சேர்ந்த யாரும் இந்தப் பதவிக்கு வரக்கூடாது என இந்தப் பதவிக்கு போட்டியிடும் கார்ஸ்டன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐஎம்எப் தலைமைப் பதவியில் இருந்த டாமினிக் ஸ்ட்ராஸ் கான், நியூயார்க் நகரில் உள்ள ஒரு ஓட்டல் பணிபெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து பதவி விலகினார்.

அடுத்த தலைவராக வருவதற்கு மெக்சிகோ சென்டிரல் வங்கியின் தலைவர் அகஸ்டின் கார்ஸ்டன்ஸ் மற்றும் பிரான்ஸ் நாட்டின் நிதியமைச்சர் கிறிஸ்டைன் லகார்ட் (வயது 55) ஆகிய இருவரும் போட்டியில் உள்ளனர்.

கடந்த 1945-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வரும் இந்த அமைப்பின் தலைமைப் பதவிக்கு பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தே தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் பெண் அமைச்சரான லகார்ட் இப்பதவிக்கு வரக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவி விலகிய ஸ்ட்ராஸ்கானும் பிரான்ஸை சேர்ந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ஸ்டென் எதிர்ப்பு

ஆனால் லகார்ட் அல்லது ஐரோப்பாவைச் சேர்ந்த யாரும் இந்தப் பதவிக்கு வருவதை அகஸ்டின் கார்ஸ்டன்ஸ் எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார். காரணம், சமீபத்தில் பொருளாதார ரீதியில் திவாலான நாடுகள் எல்லாம் ஐரோப்பாவைச் சேர்ந்தவையே என்பதால், இந்தப் பதவிக்கு ஐரோப்பியரல்லாதவரே வரவேண்டும் என கார்ஸ்டென் கூறியுள்ளார்.

English summary
Mexican central banker Agustin Carstens said Monday that the next leader of the International Monetary Fund should not be European because those nations are borrowing heavily from the lending organization. But he also acknowledged that his own bid was a long shot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X