For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பி.இ. சேர்க்கை: சென்னையில் மட்டுமே கவுன்சிலிங்!: நாளை எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் சென்னையில் மட்டுமே நடக்கவுள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பி.இ. இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு சென்னையில் மட்டும் கலந்தாய்வு நடத்துவதால், தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மிக நீண்ட தொலைவு பயணிக்க வேண்டி இருப்பதோடு, அதிக பொருள் செலவையும் சந்தித்து வருகின்றனர்.

இதனால் கடந்த 2004-05ம் ஆண்டுகளில் நடத்தப்பட்டது போல் மாநிலத்தின் 4 பகுதிகளில் கவுன்சிலிங்கை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கும் என்பதால், பல பகுதிகளி்ல் கவுன்சிலிங் நடத்தினால் குழப்பம் ஏற்படும் என்று கூறி வந்தனர் சோம்பேறிகளான அரசு அதிகாரிகள்.

இந் நிலையில் அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பி.இ. கவுன்சிலிங்கை தமிழகத்தின் பல இடங்களில் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டது. இதனால் 4 இடங்களில் கவுன்சிலிங் நடத்தப்படும் என்று கூறப்பட்டது.

அரசு எந்த முடிவு எடுத்தாலும் அதற்குத் தயார் என்று அண்ணா பல்கலைக்கழகமும் அறிவித்தது.

இப்படி எல்லாமே நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்த நிலையில், இந்த நடைமுறையை அமலாக்க போதிய கால அவகாசம் இல்லை என்று கூறி அதிகாரிகள் முட்டுக் கட்டை போட்டுவிட்டதாகத் தெரிகிறது.

இதனால் இந்த முறை சென்னையில் மட்டும் பி.இ. கவுன்சிலிங்கை நடத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

இன்று ரேண்டம் எண் வெளியீடு:

இந் நிலையில் 2011-12ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது.

பல மாணவர்கள் ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றிருக்கும்போது அவர்களை வரிசைப்படுத்த இந்த எண் வழங்கப்படுகிறது.

ஜூன் 24ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும்.

எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் நாளை வெளியீடு:

தமிழகத்தில் எம்பிபிஎஸ்- பல் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 20,765 மாணவர்களின் ரேங்க் பட்டியல் நாளை வெளியிடப்படவுள்ளது.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கடும் மதிப்பெண் போட்டி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கட்-ஆப் மதிப்பெண் 197.25 ஆக இருக்கும் என்று தெரிகிறது.

முதல்கட்ட எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 30ம் தேதி தொடங்குகிறது.

English summary
As the countdown for BE admissions begin, the counselling is scheduled only in Chennai. This will have impact on South and West TN students who have to travel hundreds of kilometers to attend the counselling
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X