For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசுக்கு அதிமுக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்-திருமாவளவன்

Google Oneindia Tamil News

சென்னை: சிங்களப் படையினரால் கடத்தப்ட்டுள்ள 23 தமிழக மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த தமிழக மீனவர்கள் 23 பேரை 5 படகுகளுடன் சிங்கள கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கு அ.தி.மு.க. அரசு உரிய அழுத்தம் கொடுத்து இந்திய அரசை விரைந்து செயல்பட வைக்க ஆவன செய்யவேண்டும்.

மிழக மீனவர்களுக்கு நிலையான பாதுகாப்பு கிடைத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசை விடுதலைசிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

அத்துடன் வருகிற 23-ந் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் பன்னாட்டு உபயோகப் பொருட்காட்சியில் சிங்களர்களின் உற்பத்தி பொருட்களும் இடம்பெறுகின்றன. சிங்கள அரசு மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிற தமிழக அரசு, இந்த கண்காட்சியில் சிங்களர்களின் உற்பத்திப் பொருட்கள் இடம்பெற அனுமதிக்க கூடாது என்று கூறியுள்ளார் திருமாவளவன்.

English summary
VCK leader Thirumavalavan has urged the ADMK govt to give more pressure to the Centre in TN Fishermen issue. He asked the centre to take immediate action to rescue the fishermen from Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X