For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓ.பன்னீர் செல்வம் சமர்ப்பித்த தமிழக பட்ஜெட்டில் ரூ. 8900 கோடிக்கு திட்டங்கள், சலுகைகள்

Google Oneindia Tamil News

CM Jayalalitha arriving to the Assembly with Finance Minister O Pannerselvam
சென்னை: தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரூ. 8900 கோடி அளவிலான திட்டங்களும், சலுகைகளும் இடம் பெற்றுள்ளன.

தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சட்டசபையில் 2011-12ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு திட்டங்கள், சலுகைகளை அவர் அறிவித்தார்.

2011-12ம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையில் மொத்த வருவாய் வரவுகள் ரூ.79 413.26 கோடி எனவும், செலவு ரூ.78,974.48 கோடி எனவும், வருவாய் உபரி ரூ.438.78 கோடி எனவும் மதிப்பிடப்பட்டிருந்தது.

இந்த இடைக்கால நிதிநிதி அறிக்கையில் நிதிப்பற்றாக்குறை ரூ.13,506.85 கோடியாக மதிப்பிடப்பட்டது.

தற்போது தமிழக அரசு தொடங்கியுள்ள மற்றும் அறிவித்துள்ள பல்வேறு புதிய திட்டங்களையும் வளர்ச்சி முயற்சிகளையும் செயல்படுத்த கூடுதல் நிதி தேவை ரூ.8900 கோடியாகும். இந்த திட்டங்களை நிறைவேற்ற நிதி ஆதாரத்தை பெருக்க ஏற்கனவே அரசு வணிக வரி, பத்திரப்பதிவு கட்டணம் ஆகியவற்றில் சில மாற்றங்களை கொண்டு வந்ததின் மூலம் அரசுக்கு ரூ.3618 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திருத்த வரவு செலவு மதிப்பீட்டில் மொத்த வருவாய் வரவு ரூ.85,685 கோடி. இதில் செலவினம் ரூ.85,511 கோடி. வருவாய் உபரி ரூ.173.87 கோடி. அதே சமயம் நிதிப்பற்றாக்குறை ரூ.16,881 கோடியாகும். இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.90 விழுக்காடாகும்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த பல்வேறு வாக்குகறுதிகளை நிறைவேற்றும் அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வண்ணம் மக்களுக்கு ரூ.8900 கோடி அளவுக்கு புதிய திட்டங்களும், சலுகைகளும் கிடைக்கும்.

மேலும் கடந்த ஆண்டு ஏற்பட்ட ரூ.2220 கோடி வருவாய் பற்றாக்குறையையும் அறவே நீக்கி ரூ.173.87 கோடி வருவாய் உபரி ஏற்படக்கூடிய அளவில் வரவு செலவு திட்டம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்த இலவச லேப்டாப் திட்டம், இலவச கறவை மாடுகள், ஆடுகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்படவுள்ளதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The ADMK govt led by CM Jayalalitha has presented its first Budget after coming to power for the third time today. The budget has Rs. 8900 cr worth schemes and benefits. Presenting the budget with a “marginal revenue surplus” of a little over Rs. 173 crore amid a DMK walkout over “foisting” of land grab cases against them, Finance Minister O. Panneerselvam said the overall outstanding debt at the end of 2011-12 was expected to be around Rs. 1,18,610 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X