For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செங்கோட்டையில் 0 மணி 0 நிமிடம் 0 விநாடியில் கொண்டாடப்பட்ட சுதந்திர தினம்

Google Oneindia Tamil News

Senkottai Celebrations
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் வீரவாஞ்சி இயக்கம் நள்ளிரவில் சுதந்திர தினத்தை கொண்டாடியது.

இந்திய தேசம் நள்ளிரவில் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றது. அந்த இனிய விடுதலை விழாவினை நாம் காலை பொழுதில் 6 மணிக்கோ, 8 மணிக்கோ தான் கொண்டாடி வருகிறோம். ஆனால் ஆங்கிலேயர்கள் விட்டு சென்ற சுவடுகளை மறக்காமல் ஆங்கில புத்தாண்டை மட்டும் டிசம்பர் 31 நள்ளிரவில் கொண்டாடி மகிழ்கிறோம். நாடு விடுதலை பெற்ற தினத்தின் நள்ளிரவினை யாரும் கொண்டாடியதில்லை.

இதனை மாற்றும விதமாக, முதன் முதலில் ஆயுதம் ஏந்தி ஆங்கிலேயே ஆட்சி தலைவர் ராபர்ட் ஆஷ் துரையை சுட்டு கொன்று ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தையே அலற வைத்த அஞ்சா நெஞ்சன் மாவீரன் வாஞ்சிநாதன் பிறந்த செங்கோட்டையில் அவரது சிலை முன்பு இந்திய தேசம் அடி்மை விலங்கு உடைத்தெறியப்பட்ட ஆகஸ்ட் 15ம் தேதி 0 மணி 0 நிமிடம் 0 விநாடியில் நகராட்சி சங்கு ஓலிக்க, வாண வெட்டுகள் முழங்க வீரவாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்து சுதந்திரம் பெற்ற தினத்தை உள்ளூர் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வீரவாஞ்சி இயக்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலகலமாக நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை வாஞ்சி இயக்கத்தின் நிறுவனர் ராமநாதன் தலைமையில் வாஞ்சி இயக்க பிரமுகர்கள் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் தியாகி கோதையம்மாள், வாஞ்சி இயக்க தலைவர் ராமநாதன், நகராட்சி தலைவர் ரகீம், துணை தலைவர் ஆதிமூலம், பாமக இலக்கிய அணி நம்பிராஜன், பாஜக சார்பில் முருகேசன், முத்துகுமார், கவுன்சிலர் ஐயப்பன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சுதந்திர தின மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

English summary
Veera Vaanjinathan movement celebrated Independance Day at midnight yesterday in Senkottai. Movement founder Ramanathan arranged the celebration and many VIPs from the town including freedom fighter Kothai Ammal and others
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X