முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை குறைக்க ஜெயலலிதாவால் முடியும்- ராமதாஸ்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுவை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்ததற்கான அதிகாரப்பூர்வமான ஆணை வேலூர் சிறை நிருவாகத்திற்கு வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அடுத்த 7 நாட்களில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தண்டனை நிறை வற்றப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது மனிதாபிமானமுள்ள அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்திருக்கிறது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் தடா சட்ட விதிகளுக்கு முரணாக 19 வயதிலேயே கைது செய்யப்பட்டவர். தடா சட்ட விதிகளின்படி, சி.பி.ஐயால் சித்திரவதை செய்யப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன் ஆகியோருக்கும் இதே முறையில்தான் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் தனிமை சிறை கொட்டடியில் கொடுமையை அனுபவித்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்த கருணை மனு மீது 11 ஆண்டுகள் கழித்து குடியரசுத் தலைவர் முடிவெடுத்துள்ளார். ஏற்கெனவே தூக்கு தண்டனையைவிட மிகக் கொடுமையான தனிமை சிறை தண்டனையை அனுபவித்துவிட்ட மூவருக்கும், மீண்டும் ஒரு தண்டனை வழங்குவது நீதியாக இருக்காது.
ஒருவரின் கருணை மனு மீது முடிவெடுப்பதில் காலதாமதம் செய்யப்பட்டால், அவருடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எத்தனையோ தீர்ப்புகளை வழங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த தேவீந்தர் சிங்பால் புல்லார் என்பவரின் கருணை மனு மே மாதம் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை கடந்த 23ஆம் தி விசாரித்த உச்சநீதிமன்றம், அவரது கருணை மனு மீது முடிவெடுப்பதில் தாமதம் காட்டப்பட்டது சரியல்ல என்றும், இதை அடிப்படையாக வைத்து அவரது தண்டனையை குறைப்பது குறித்த கோரிக்கை மீது முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் நீதி வழங்குவதற்கு பொருந்தும்.
இன்னொருபுறம் இந்த மூவரின் தூக்கு தண்டனையை இரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், கருத்தரங்கம், மாநாடு, மனிதச் சங்கிலி எனப் பல்வேறு மக்கள் இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாகரிகமான சமுதாயத்தில் தூக்கு தண்டனை என்பது பெரும் களங்கமாக இருக்கும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இம்மூவரும் தண்டிக்கப்பட்ட ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐயின் முன்னாள் இயக்குநர் கார்த்திகேயனே, இந்தியாவில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
எந்த நிமிடம் உயிர் பறிக்கப்படுமோ என்ற வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் மூவரையும் காப்பாற்ற உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழக அரசுக்கு இருக்கும் நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்களின் தூக்கு தண்டனையை குறைப்பதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் முடியும்.
எனவே, இம்மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்காக தமிழகச் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கோரியுள்ளார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications