மார்த்தாண்டம் அருகே ஓணம் கொண்டாடுவதில் தகராறு: இளம் பெண் தீக்குளித்து சாவு
ஆரல்வாய்மொழி: மார்த்தாண்டம் அருகே ஓணம் பண்டிகை கொண்டாடுவதில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தீக்குளித்து இறந்தார்.
மார்த்தாண்டம் அருகே உள்ள செருப்பாலூர் குன்னம் குளத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். பெட்டிக்கடை வைத்துள்ளார். அவரது மகள்கள் ராஜம், விஜிலாமேரி. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் விஜிலாமேரியை பூதப்பாண்டி துவரங்காடு பகுதியைச் சேர்ந்த சிவகுமாருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். அவர்களுக்கு குழந்தை இல்லை.
அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் அவர்கள் கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் விஜிலாமேரிக்கு திருவரம்பு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 3 மாதங்களாக அவர்கள் இருவரும் ஆரல்வாய்மொழி கண்டவிளைகாடு பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். விஜிலாமேரி அங்குள்ள செங்கல்சூளையில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் விஜிலாமேரியின் தாயார் சொர்ணம் மகளுக்கு ஓணப்பொடி கொண்டு வந்தார். இதையடுத்து விஜிலாமேரியும், செல்வகுமாரும் புத்தாடை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்களுக்குள் பண்டிகை கொண்டாடுவது குறிச்சு தகராறு ஏற்பட்டது. இதையடுத்து செல்வகுமார் வெளியே சென்றுவிட்டார்.
திடீரென விஜிலாமேரி வீட்டில் இருந்த மண்ணெணெய்யை எடுத்து உடலில் ஊற்றி பற்றவைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை கனகராஜ் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications